ஓட்டுநர் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஓட்டுநர் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வெளிப்பாளையம்:
10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உரிமைகுரல் ஓட்டுனர் தொழிற்சங்கத்தினர் நாகை வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் கார்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் பாக்கியராஜ், இணை செயலாளர் பாஸ்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய மோட்டார் வாகன சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்தக் கூடாது. போக்குவரத்து அலுவலகங்களில் வெளிப்படையான நிர்வாகத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் நாகை, கீழ்வேளூர், வேதாரண்யம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான டிரைவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட துணைச் செயலாளர் பாலமுருகன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story