திருப்பத்தூரில் 12,302 பயனாளிகளுக்கு ரூ.28 கோடி நலத்திட்ட உதவி. அமைச்சர் எ.வ.வேலு வழங்கினார்
திருப்பத்தூரில் 12,302 பயனாளிகளுக்கு ரூ.28 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் எ.வ.வேலு வழங்கினார்.
திருப்பத்தூர்
திருப்பத்தூரில் 12,302 பயனாளிகளுக்கு ரூ.28 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் எ.வ.வேலு வழங்கினார்.
ரூ.28 கோடி நலத்திட்ட உதவி
திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் 12,302 பயனாளிகளுக்கு ரூ.28 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் க.தேவராஜி, ஏ.நல்லதம்பி, அ.செ.வில்வநாதன், மு.பெ.கிரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி வரவேற்று பேசினார்.
பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.
அவர் பேசியதாவது:-
12,960 பேருக்கு வீடு
திருப்பத்தூர் மாவட்டத்திற்கு நான் அமைச்சராக பதவியேற்றது முதல் 6,720 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை, உழவர் பாதுகாப்புத்துறை சார்பில் 2,128 பயனாளிகளுக்கு ரூ.2.65 கோடி மதிப்பிலும், உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் மூலம் 1,747 பயனாளிகளுக்கும், 6046 சிறு, குறு விவசாயிகளுக்கு சான்றிதழ், 3,498 மாணவர்களுக்கு ஓ.பி.சி. சான்றிதழ், 8,489 மாணவர்களுக்கு முதல் பட்டதாரி சான்று, 5,466 நபர்களுக்கு குடும்ப அட்டைகள், கலைஞர் வீட்டுவசதி மூலமாக 41,296 வீடு கட்டி தரப்பட்டுள்ளது. இன்னும் 12,960 பயனாளிகளுக்கு வீடு கட்டித் தரப்படும்.
திருப்பத்தூர் மாவட்டம் புதிதாக தொடங்கப்பட்ட மாவட்டம் என்பதனால் மாவட்ட அலுவலர்கள் நியமிக்காத காரணத்தினால் சம்மந்தப்பட்ட அரசு செயலாளர்களுக்கு மாவட்ட அலுவலர்களை நியமிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளேன். விரைவில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் கட்டப்பட்டு அதனை முதல்-அமைச்சர் திறந்துவைக்க உள்ளார். அதற்குள் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுவார்கள்.
அதிகாரிகளை அணுகி
மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்திற்கு உள்ளாட்சி அமைப்புகள் அதிக கவனம் செலுத்த வேண்டும். ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் வரவில்லை என்றால் மாவட்ட கலெக்டரிடம் புகார் தெரிவிக்கலாம். அவர்களின் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்டத்தில் உள்ள பொது மக்கள் தங்களின் தேவைகளை சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களை அணுகி விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் என்.கே.ஆர், சூரியகுமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வராசு, வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத் தலைவர் ராஜேந்திரன், நகராட்சி தலைவர் க.சங்கீதா, ஒன்றியக்குழு தலைவர்கள் விஜயா, திருமதி, சத்யா, சங்கீதா, அரசுத்துறை உயர் அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story