கர்நாடக காங்.பிரசார குழு தலைவராக எம்.பி.பட்டீல் பதவி ஏற்பு
கர்நாடக காங்.பிரசார குழு தலைவராக எம்.பி.பட்டீல் பதவி ஏற்றுள்ளார்
பெங்களூரு, மார்ச்.29-
கர்நாடக காங்கிரஸ் பிரசார குழு தலைவராக எம்.பி.பட்டீல் நியமிக்கப்பட்டார். அவர் அந்த குழுவின் தலைவராக பதவி ஏற்கும் நிகழ்ச்சி பெங்களூருவில் உள்ள அரண்மனை மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் எம்.பி. பட்டீல், காங்கிரஸ் பிரசார குழு தலைவராக பதவி ஏற்றார். இந்த நிகழ்ச்சியில் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், எதிா்க்கட்சி தலைவர் சித்தராமையா உள்பட அக்கட்சியின் முன்னணி தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இதில் எம்.பி.பட்டீல் பேசும்போது, "கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சியை ஆட்சியில் அமர வைப்பதே எனது நோக்கம். அதற்காக மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து கட்சியை பலப்படுத்தும் பணியில் ஈடுபடுவேன். பா.ஜனதா அரசின் மோசமான செயல்பாடுகளால் மக்கள் வெறுப்பில் உள்ளனர். மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புகிறார்கள். தேசபக்தி குறித்து பா.ஜனதாவினர் எங்களுக்கு பாடம் கற்பிக்க வேண்டிய அவசியமில்லை" என்றார்.
Related Tags :
Next Story