கரூர் மாவட்டத்தில் உள்ள 8 பேரூராட்சிகளில் நியமனக்குழு, வரி விதிப்பு மேல்முறையீட்டு குழு உறுப்பினர்கள் தேர்வு; பா.ஜ.க. கவுன்சிலர் உள்ளிருப்பு போராட்டம்


கரூர்
x
கரூர்
தினத்தந்தி 31 March 2022 6:17 PM GMT (Updated: 31 March 2022 6:17 PM GMT)

கரூர் மாவட்டத்தில் உள்ள 8 பேரூராட்சிகளில் நியமனக்குழு, வரி விதிப்பு மேல்முறையீட்டு குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். புலியூரில் பா.ஜ.க. கவுன்சிலர் உள்ளிருப்பு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கரூர், 
தேர்வு
கரூர் மாவட்டத்தில் மருதூர், உப்பிடமங்கலம், அரவக்குறிச்சி, நங்கவரம், புலியூர், புஞ்சை தோட்டக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் ஆகிய 8 பேரூராட்சிகளில் நியமனக்குழு, வரி விதிப்பு மேல்முறையீட்டு குழு உறுப்பினர்கள் தேர்வு நேற்று நடைபெற்றது. அதன்விவரம் பின்வருமாறு:-
மருதூர் 
மருதூர் பேரூராட்சி நியமனக்குழு உறுப்பினராக 2-வது வார்டு கவுன்சிலர் சத்யா, வரி விதிப்பு மேல்முறையீட்டு குழு உறுப்பினர்களாக 6-வது வார்டு கவுன்சிலர் கந்தசாமி, 12-வது வார்டு கவுன்சிலர் சத்யபிரியா, 13-வது வார்டு கவுன்சிலர் முருகேசன், 10-வது வார்டு கவுன்சிலர் தீபா ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். 
உப்பிடமங்கலம் 
உப்பிடமங்கலம் பேரூராட்சி நியமனக்குழு உறுப்பினராக 14-வது வார்டு கவுன்சிலர் தமிழ்செல்வி, வரி விதிப்பு மேல்முறையீட்டு குழு உறுப்பினர்களாக 1-வது வார்டு கவுன்சிலர் வெள்ளைச்சாமி, 7-வது வார்டு கவுன்சிலர் சரண்யா, 9-வது வார்டு கவுன்சிலர் வண்ணமயில், 11-வது வார்டு கவுன்சிலர் ஜோதிமணி ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். 
அரவக்குறிச்சி
அரவக்குறிச்சி பேரூராட்சி நியமனக்குழு உறுப்பினராக 5-வது வார்டு கவுன்சிலர் சந்திரா, வரி விதிப்பு மேல்முறையீடு குழு உறுப்பினர்களாக 8- வது வார்டு கவுன்சிலர் நர்கீஸ்பானு, 12-வது வார்டு கவுன்சிலர் சுரேஷ், 13-வது வார்டு கவுன்சிலர் மைக்கேல், 15-வது வார்டு கவுன்சிலர் ஈஸ்வரி ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
நங்கவரம்
நங்கவரம் பேரூராட்சி நியமனக்குழு உறுப்பினராக 5-வது வார்டு கவுன்சிலர் ராஜப்பன், வரி விதிப்பு மேல்முறையீடு குழு உறுப்பினர்களாக 1-வது வார்டு கவுன்சிலர் செல்வகுமார், 6-வது வார்டு கவுன்சிலர் குணசேகர், 8-வது வார்டு கவுன்சிலர் அமுதவள்ளி, 13-வது வார்டு கவுன்சிலர் பாலன் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
புலியூர் 
புலியூர் பேரூராட்சி நியமனக்குழு உறுப்பினராக 12-வது வார்டு கவுன்சிலர் தங்கமணி, வரி விதிப்பு மேல்முறையீட்டு குழு உறுப்பினர்களாக 2-வது வார்டு கவுன்சிலர் ராணி, 5-வது வார்டு கவுன்சிலர் கண்ணன், 14-வது வார்டு கவுன்சிலர் ரேவதி, 6-வார்டு கவுன்சிலர் ஜெயந்தி ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். 
போராட்டம்
இதற்கிடையில் புலியூர் பேரூராட்சி 4-வது வார்டு பா.ஜ.க. கவுன்சிலர் விஜயகுமார் என்பவர் பேரூராட்சி தலைவரை தேர்வு செய்த பிறகு வரிமேல் முறையீட்டு குழு உறுப்பினர் மற்றும் நியமனக்குழு உறுப்பினர்களை தேர்வு செய்ய வேண்டும் என கூறி பேரூராட்சி அலுவலக வாயில் முன்பு அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த பசுபதிபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், பேரூராட்சி செயல் அலுவலரும், தேர்தல் அதிகாரியுமான பாலசுப்பிர மணியன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விஜயகுமாரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து அவர் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக கூறி விட்டு சென்றார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏறப்பட்டது.
புஞ்சை தோட்டக்குறிச்சி
புஞ்சை தோட்டக்குறிச்சி பேரூராட்சி நியமனக்குழு உறுப்பினராக 1-வது வார்டு கவுன்சிலர் மகேஸ்வரன், வரி விதிப்பு மேல்முறையீடு குழு உறுப்பினர்களாக 4-வது வார்டு கவுன்சிலர் மீனாட்சி, 11-வது வார்டு கவுன்சிலர் மல்லிகா, 8-வது வார்டு கவுன்சிலர் தனலட்சுமி, 12-வது வார்டு கவுன்சிலர் பருவதம் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
கிருஷ்ணராயபுரம்
கிருஷ்ணராயபுரம் பேரூராட்சி நியமனக்குழு உறுப்பினராக 15-வது வார்டு கவுன்சிலர் மதியழகன், வரி விதிப்பு மேல்முறையீடு குழு உறுப்பினர்களாக 14-வது வார்டு கவுன்சிலர் நல்லேந்திரன், 10-வது வார்டு கவுன்சிலர் பட்டாயி, 7-வது வார்டு கவுன்சிலர் வடிவேல், 4-வது வார்டு கவுன்சிலர் ராதிகா ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
பழைய ஜெயங்கொண்ட சோழபுரம்
பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் பேரூராட்சி நியமன குழு உறுப்பினராக 11-வது வார்டு கவுன்சிலர் தினேஷ்குமார், வரிவிதிப்பு மேல்முறையீட்டு குழு உறுப்பினர்களாக 13-வது வார்டு கவுன்சிலர் பாக்கியலட்சுமி, 9-வது வார்டு கவுன்சிலர் ரத்தினம்பால், 5-வது வார்டு கவுன்சிலர் புவனேஸ்வரி, 2-வது வார்டு கவுன்சிலர் தேவி ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.


Next Story