டிரைவரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.55 ஆயிரம் மாயம்
டிரைவரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.55 ஆயிரம் மாயம் ஆனது.
கரூர்,
கரூர் வெங்கமேடு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 31). டிரைவர். இவர் ஆன்லைனில் ஒரு நிறுவனத்தின் பெயரில் வந்த விளம்பரத்தை பார்த்து உடைகள் வாங்குவதற்காக ரூ.420 போன் பே மூலம் செலுத்தியுள்ளார். ஆனால் 10 நாட்களுக்கு மேலாகியும் அந்த நிறுவனத்தில் இருந்து எந்த உடைகளும் வரவில்லை. இதையடுத்து விளம்பரத்தில் இருந்த தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது போனில் பேசிய மர்ம நபர் மணிகண்டனிடம் உரிய விளக்கத்தை கேட்டுக்கொண்டு, இதுகுறித்து ஆய்வு செய்து கூறுவதாக போனை துண்டித்துள்ளார். அடுத்த சில வினாடிகளில் மணிகண்டனின் வங்கிக்கணக்கில் இருந்து ரூ.54,999 மாயமானதால் அவர் அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து பணம் மாயமானது குறித்து மணிகண்டன் கரூர் சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் அம்சவேணி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story