லாட்டரி சீட்டுகள் விற்ற 6 பேர் கைது
லாட்டரி சீட்டுகள் விற்ற 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
குளித்தலை,
குளித்தலை நகரப்பகுதி மற்றும் வதியம் பஸ் நிறுத்தம் அருகே அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் அந்தப் பகுதிகளுக்கு குளித்தலை போலீசார் சென்று பார்த்தபோது, அப்பகுதிகளில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவது தெரியவந்துள்ளது. இதையடுத்து தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்ற கீழகுறப்பாளையம் பகுதியை சேர்ந்த ரெங்கநாதன் (வயது 52), நச்சலூர் பகுதியை சேர்ந்த வாசுதேவன் (55), குளித்தலை நகர பகுதியை சேர்ந்த அபிராமிசுந்தரம் (55), முகமது ரபிக் (52), சந்தோஷ்குமார் (30), கிருஷ்ணமூர்த்தி (73) ஆகிய 6 பேரை குளித்தலை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இவர்களிடமிருந்து மொத்தம் ரூ.27 ஆயிரத்து 690, ஒரு மோட்டார் சைக்கிள், 3 செல்போன்கள் மற்றும் லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
Related Tags :
Next Story