7-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை


7-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 1 April 2022 12:16 AM IST (Updated: 1 April 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருச்சியில் தந்தை திட்டியதால் 7-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பொன்மலைப்பட்டி, ஏப்.1-
திருச்சியில் தந்தை திட்டியதால் 7-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
7-ம் வகுப்பு மாணவன்
திருச்சி பொன்மலை மிலிட்டரி காலனி 17-வது தெருவை சேர்ந்தவர் சாந்தகுமார். இவரது மகன் தேவராஜ் (வயது 14). இவர் பொன்மலைப்பட்டியில் உள்ள ஒரு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் காலையில் மாணவன் தேவராஜ் வழக்கம்போல் பள்ளிக்கு சென்றுவிட்டு, மாலையில் வீட்டுக்கு வந்தார்.
பின்னர் அவர் விளையாடியதாக தெரிகிறது. அப்போது அவரை தந்தை சாந்தகுமார் படிப்பு முக்கியமா விளையாட்டு முக்கியமா என்று சொல்லி திட்டியதாக கூறப்படுகிறது. அதன்பின்னர் அவர் வேலைக்கு சென்றுவிட்டார்.
தற்கொலை
இந்தநிலையில் வீட்டுக்கு சென்ற தேவராஜ் தனது அறைக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டார். இரவு 8 மணி அளவில் தேவராஜின் அறைக்கதவை அவரது தாயார் தட்டியுள்ளார். ஆனால் நீண்டநேரம் ஆகியும் திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது, மகன் தேவராஜ் மின்விசிறியில் தூக்கில் தொங்கியுள்ளார்.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் அக்கம்பக்கத்தினர் உதவியோடு மகனை மீட்டு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் மாணவன் தேவராஜ் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
 இதுகுறித்த புகாரின் பேரில் பொன்மலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story