மோசடியில் ஈடுபட முயன்றவர் கைது


மோசடியில் ஈடுபட முயன்றவர் கைது
x
தினத்தந்தி 1 April 2022 12:34 AM IST (Updated: 1 April 2022 12:38 AM IST)
t-max-icont-min-icon

மோசடியில் ஈடுபட முயன்றவர் கைது செய்யப்பட்டார்

சிவகங்கை,
சிவகங்கை காந்தி வீதியில் தவணை முறையில் பொருட்களை விற்கும் ஒரு தனியார் கடை உள்ளது. இந்த கடைக்கு வந்த ஒரு நபர் தவணை முறையில் டிவி வாங்குவதற்கு வந்ததாக தெரிவித்தார். அத்துடன் அவர் தான் சிவகங்கை பஸ் நிலைய பகுதியில் வசிப்பதாகவும் தெரிவித்தார். அவர் கொடுத்த ஆதார் எண்ணை சோதனை செய்து பார்த்தபோது அதில் இருந்த விலாசம் திருவண்ணாமலை மாவட்டம் வீரப்பனுர் என்று இருந்தது. தொடர்ந்து அவரை கடை ஊழியர்கள் விசாரித்த போது தனது பெயர் விக்னேஷ் (23) என்றும் அவர் திருவண்ணாமலை மாவட்டம் வீரப்பனுரில் வசிப்பதும் தெரிந்தது. இதை தொடர்ந்து அவரை பிடித்து சிவகங்கை நகர் போலீசில் ஒப்படைத்தனர் இது தொடர்பாக நகர் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தார்.

Next Story