மாட்டு வண்டி எல்கை பந்தயம்
பெருங்குடிவேண்டி வந்த அம்மன் கோவில் திருவிழாவையொட்டி மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.
அரிமளம்,
மாட்டுவண்டி எல்கை பந்தயம்
அரிமளம் அருகே உள்ள பெருங்குடி வேண்டி வந்த அம்மன் கோவிலில் பங்குனி திருவிழா கடந்த 4 நாட்களாக நடைபெற்று வருகிறது. இதையொட்டி மாட்டுவண்டி எல்கை பந்தயம் நடத்தப்பட்டது. இந்த பந்தயத்தில் புதுக்கோட்டை, அறந்தாங்கி, திருச்சி, தஞ்சாவூர், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன.
பந்தயமானது பெரிய மாடு, நடு மாடு, சிறிய மாடு, பூஞ்சிட்டு மாடு என 4 பிரிவுகளாக நடத்தப்பட்டது. முதலில் நடைபெற்ற பெரிய மாட்டு பந்தயத்தில் 9 ஜோடி மாடுகள் கலந்து கொண்டன. இதில் முதல் பரிசை பெருங்குடி ராஜாங்கம், 2-ம் பரிசு வெல்லனூர் நடேசன், 3-ம் பரிசு அரிமளம் அய்யப்பன், 4-ம் பரிசு பொய்யாத நல்லூர் கபீப் முகமது ஆகியோருக்கு சொந்தமான மாடுகள் பெற்றன.
வெற்றி இலக்கை நோக்கி...
இதனைதொடர்ந்து நடைபெற்ற நடுமாடு பந்தயத்தில் 12 ஜோடி மாடுகள் கலந்து கொண்டன. இதில், வெற்றி இலக்கை நோக்கி மாடுகள் சீறிப்பாய்ந்து சென்றன. இதில் முதல் பரிசை வைரிவயல் வீரமுனி ஆண்டவர், 2-ம் பரிசு அருணாச்சலபுரம், 3-ம் பரிசு மாவூர் மோகன், பீர்க்கலைக்காடு பைசல், 4-ம் பரிசு பாப்பம்பட்டி மச்சக்காளை ஆகியோருக்கு சொந்தமான மாடுகள் பெற்றன.
சிறிய மாடு பந்தயத்தில் 11 ஜோடி மாடுகள் கலந்து கொண்டன. இதில் முதல் பரிசை மாவூர் ராமச்சந்திரன், 2-ம் பரிசு கரையபட்டி துரைராஜ், 3-ம் பரிசு பரளி சித்தார்த், 4-ம் பரிசு பெருங்குடி வேண்டி வந்த அம்மன், ஓணாங்குடி எல்லா புகழும் இறைவனுக்கே ஆகியோருக்கு சொந்தமான மாடுகள் பெற்றன.
ரொக்கப்பரிசு
இறுதியாக நடைபெற்ற பூஞ்சிட்டு மாட்டு பந்தயத்தில் 23 ஜோடி மாடுகள் கலந்து கொண்டதால் பந்தயம் இரு பிரிவாக நடத்தப்பட்டது. இதில் முதல் பரிசை பரளி சித்தார்த், பரமந்தூர் குமார், 2-ம் பரிசு குருவிடைசேரி சாத்தையா, மாத்தூர் குப்புசாமி, 3-ம் பரிசு குறுந்திரகோட்டை மன்மத சாமி, சுப்பம்மாசத்திரம் சரத், 4-ம் பரிசு அம்மன்பேட்டை உஷாராணி, கானாடுகாத்தான் சோலை ஆண்டவர் ஆகியோருக்கு சொந்தமான மாடுகள் பெற்றன.
பந்தயத்தில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளருக்கு ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. பந்தயம் நடைபெற்ற பெருங்குடி- புதுக்கோட்டை சாலை இருபுறமும் திரளான மக்கள் கலந்துகொண்டு பந்தயத்தை கண்டு ரசித்தனர்.
Related Tags :
Next Story