நெல்லை மாநகராட்சியில் 6 குழு தலைவர்கள் தேர்வு
நெல்லை மாநகராட்சியில் 6 குழு தலைவர்கள் தேர்ந்து எடுக்கப்பட்டனர்.
நெல்லை:
நெல்லை மாநகராட்சியில் 6 குழு தலைவர்கள் தேர்ந்து எடுக்கப்பட்டனர்.
குழு தேர்தல்
நெல்லை மாநகராட்சிக்கு தேர்தல் நடத்தி 55 கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களிலிருந்து மேயர், துணை மேயர் ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் நெல்லை, பாளையங்கோட்டை, மேலப்பாளையம் மற்றும் தச்சநல்லூர் ஆகிய 4 மண்டலங்களுக்கு தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மேலும் மாநகராட்சியில் உள்ள குழுக்களுக்கான உறுப்பினர்களும் தேர்வு செய்யப்பட்டனர்.
சான்றிதழ்
இந்த நிலையில் நெல்லை மாநகராட்சி கூட்ட அரங்கில் நெல்லை மாநகராட்சியில் நியமன குழு உறுப்பினர் தேர்தல் ஆணையாளர் விஷ்ணு சந்திரன் முன்னிலையில் நேற்று காலை நடைபெற்றது. இதில் 12-வது வார்டு கவுன்சிலர் கோகிலவாணி சுரேஷ் நியமன குழு உறுப்பினராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் அப்துல் வகாப் எம்.எல்.ஏ., மேயர் பி.எம்.சரவணன், துணை மேயர் ராஜூ மற்றும் கவுன்சிலர்கள் வாழ்த்து தெரிவித்தனர். மாலையில் 6 குழு தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இதில் பணிகள் குழு தலைவராக வில்சன் மணித்துரை, வரி விதிப்பு மற்றும் நிதிக்குழு தலைவராக சுதா மூர்த்தி, கல்விக்குழு தலைவராக பவுல்ராஜ், கணக்கு குழு தலைவராக டாக்டர் சங்கர் குமார், பொது சுகாதார குழு தலைவராக ரம்ஜான் அலி, நகரமைப்பு குழு தலைவராக சங்கீதா ஆகியோர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். குழுத்தலைவர்களுக்கு ஆணையாளர் விஷ்ணுசந்திரன் சான்றிதழ் வழங்கினார்.
Related Tags :
Next Story