மதுபானம்,புகையிலை பொருட்கள் விற்ற 13 பேர் கைது


மதுபானம்,புகையிலை பொருட்கள் விற்ற 13 பேர் கைது
x
தினத்தந்தி 1 April 2022 12:46 AM IST (Updated: 1 April 2022 12:46 AM IST)
t-max-icont-min-icon

தொண்டி பகுதியில் மதுபானம்,புகையிலை பொருட்கள் விற்ற 13 பேர் கைது செய்யப்பட்டனர்.

தொண்டி,

தொண்டி, எஸ்.பி.பட்டினம் பகுதியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக், திருவாடானை துணை போலீஸ் சூப்பிரண்டு ஜான் பிரிட்டோ ஆகியோர் உத்தரவின்படி தொண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் விஜய பாஸ்கர், ராமகிருஷ்ணன், காசி மற்றும் போலீசார் தொண்டி பகுதியில் உள்ள கடைகளில் புகையிலை மற்றும் போதை பொருட்கள் விற்பனை தொடர்பாக தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது கடைகளில் விற்பனை செய்யப்பட்ட 65 பண்டல் புகையிலை மற்றும் பான்மசாலா போன்ற போதை பொருட்களையும், இப்பகுதிகளில் அனுமதியின்றி விற்பனை செய்யப்பட்ட 80 மதுபான பாட்டில்களையும் பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக கண்ணாரேந்தல் ராமநாதன் (வயது 50), தொண்டி கலீல்ரஹீம் (52), பழையனகோட்டை கோபி(31), தொண்டி முகமது அலி (48), பாண்டுகுடி கதிரேசன் (42) பாண்டுகுடி சாமிக்கண்ணு (48), தொண்டி வட்டாணம் விலக்கு சாலை அப்பாஸ் (32), பி.வி. பட்டினம் காளீஸ்வரன் (29), என்.மங்கலம் சுரேஷ் (37), பனஞ்சாயல் ஆனந்து (30) கோடிவயல் நாகராஜன் (53), அ.மணக்குடி ராமநாதன், தொண்டி சுப்பிரமணியன் (61) ஆகிய 13 பேரை கைது செய்தனர்.



Next Story