பகவதி அம்மனுக்கு சிறப்பு பூஜை


பகவதி அம்மனுக்கு சிறப்பு பூஜை
x
தினத்தந்தி 1 April 2022 12:48 AM IST (Updated: 1 April 2022 12:48 AM IST)
t-max-icont-min-icon

பகவதி அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.

பொன்னமராவதி, 
பொன்னமராவதி அருகே உள்ள வெள்ளையாண்டிப்பட்டி சிவபுரம் அகத்தியர் சிவசித்தர் பீடத்தில் அமாவாசையையொட்டி பகவதி அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதையொட்டி சிவாச்சாரியர்கள் யாகத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட புனிதநீர் அடங்கிய கலசத்தை கோவிலை சுற்றி வலம் வந்து பகவதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்களை செய்தனர். பின்னர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு பகவதி அம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது.

Next Story