கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
சிங்கம்புணரி,
மத்திய பா.ஜனதா அரசின் பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து சிங்கம்புணரி வட்டார காங்கிரஸ் சார்பில் பிரான்மலை பஸ் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி தலைமை தாங்கினார்.வட்டார காங்கிரஸ் தலைவர் ஜெயராம் மற்றும் தலைமை பேச்சாளர் சிங்கை தருமன், .ராமசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தின் போது கியாஸ் சிலிண்டருக்கு மாைல அணிவித்து மத்திய அரசுக்கு எதிராக காங்கிரசார் கோஷமிட்டனர்.
Related Tags :
Next Story