மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி
மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி
திருச்சி, ஏப்.1-
திருச்சி சத்திரம் பஸ் நிலையம் பகுதியில் உள்ள இ.ஆர்.மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் மாவட்ட அளவிலான உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் கண்காட்சி நேற்று நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் சிவராசு கண்காட்சியை தொடங்கி வைத்து பார்வையிட்டார். பின்னர் அவர் மாணவர்களுடன் கலந்துரையாடும் போது, மாணவர்கள் கல்வி கற்பதில் அறிவியல் ஆர்வத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். அறிவியல் விளக்கத்தை அறிந்து கொண்டு கற்கும்போது, நமது அறிவு விரிவாகும். ஆசிரியர்கள் மாணவர்களுக்கு செயல்முறை விளக்கத்துடன் கல்வியை கற்றுக் கொடுப்பது அவசியம். அப்போதுதான் அறிவியல் கோட்பாடுகள், கருத்துக்களை மாணவர்கள் எளிதில் புரிந்து கொள்ள முடியும் என்றார். கண்காட்சியில் 115 அரசு பள்ளிகளில் இருந்து மாணவ- மாணவிகள் பங்கேற்று தங்களது அறிவியல் படைப்புகளை காட்சிப்படுத்தினர். இதில் சுற்றுச்சூழல், மாசு கட்டுப்பாடு, நீர் மேலாண்மை, மின்சாரம் தயாரிப்பு உள்பட பல்வேறு வகையான சிந்தனைகளுடன் கூடிய அறிவியல் படைப்புகள் இடம் பெற்றிருந்தன. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி, மாவட்ட கல்வி அலுவலர் ராஜேந்திரன், உதவி மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் பாலச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். கண்காட்சியில் சிறந்த அறிவியல் படைப்புகளுக்கு மாலையில் பரிசுகள் வழங்கப்பட்டது.

Related Tags :
Next Story