சிவகங்கையில் 15-ந்தேதி முதல் புத்தக கண்காட்சி


சிவகங்கையில் 15-ந்தேதி முதல் புத்தக கண்காட்சி
x
தினத்தந்தி 1 April 2022 1:12 AM IST (Updated: 1 April 2022 1:12 AM IST)
t-max-icont-min-icon

வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்க சிவகங்கையில் 15-ந்தேதி முதல் புத்தக கண்காட்சி நடைபெறும்.

சிவகங்கை

சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி நிருபர்களிடம் கூறியதாவது:- சிவகங்கை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்க முதன்முறையாக பெரிய அளவில் புத்தகத்திருவிழாவினை பபாசி அமைப்புடன் இணைந்து சிவகங்கையில் நடத்தப்படவுள்ளது. இப்புத்தகத்திருவிழா சிவகங்கை மன்னர் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் வருகின்ற 15-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை 11 நாட்கள் நடைபெறவுள்ளது.. இதையொட்டி 110 அரங்குகள் அமைக்கப்படவுள்ளது. அதில், 100 அரங்குகள் புத்தகக்கண்காட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 10 அரங்குகள் அரசு துறை சார்பில் அமைக்கப்படவுள்ளது. இந்த திருவிழா காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெறும். இதில் அதில் தினந்தோறும் காலை 11 மணி முதல் மாலை 4. மணி வரை மாணவ, மாணவியர்களிடையே பல்வேறு போட்டிகள் நடத்தப்படும். மேலும் வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்கும் வகையில் தினசரி ஒரு மணி நேரம் வாசிப்பு நிகழ்ச்சி நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story