அரசு பெண் ஊழியர்களின் 3-வது பிரசவத்துக்கு விடுமுறை வழங்கலாம்


அரசு பெண் ஊழியர்களின் 3-வது பிரசவத்துக்கு விடுமுறை வழங்கலாம்
x
தினத்தந்தி 1 April 2022 1:21 AM IST (Updated: 1 April 2022 1:21 AM IST)
t-max-icont-min-icon

அரசு பெண் ஊழியர்களின் 3-வது பிரசவத்துக்கு விடுமுறை வழங்கலாம் என ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

மதுரை, 
மதுரை மாநகராட்சியில் பணியாற்றி வரும் தீபலெட்சுமி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், “எனக்கு 2 குழந்தைகள் உள்ளனர். 3-வது முறையாக கர்ப்பமானேன். 20.9.2021 முதல் மகப்பேறு விடுமுறை கேட்டு விண்ணப்பித்தேன். ஆனால் முதல் 2 பிரசவத்துக்கு மட்டும்தான் மகப்பேறு விடுமுறை வழங்க முடியும் என்று கூறி எனது விண்ணப்பத்தை நிராகரித்து மதுரை மாநகராட்சி உதவி கமிஷனர் உத்தரவிட்டார். இந்த உத்தரவை ரத்து செய்து எனது 3-வது பிரசவத்துக்கு 12 மாதம் மகப்பேறு விடுமுறை வழங்கும்படி உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி ஸ்ரீமதி முன்பு விசாரணைக்கு வந்தது. 
முடிவில் நீதிபதி பிறப்பித்த உத்தரவில், “தமிழக அரசு கடந்த 1993-ம் ஆண்டு பிறப்பித்த அரசாணையில் திருமணமான பெண் அரசு ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் உயிருடன் இருக்கும் 2 குழந்தைகளுக்கான பிரசவத்துக்கு மகப்பேறு விடுமுறை வழங்கலாம் என கூறப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இது சம்பந்தமான பிரதான விதியில், திருமணமான பெண் அரசு ஊழியர்களுக்கு 3-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு மகப்பேறு விடுமுறை வழங்கக்கூடாது எனக் கூறப்பட்டுள்ளது. விதிகளை விட பிரதான விதி மேற்பட்டதாக இந்த கோர்ட்டு கருதுகிறது. அதன்படி மனுதாரர் 3-வது குழந்தைக்கு மகப்பேறு விடுமுறை பெற தகுதியானவர். எனவே மனுதாரருக்கு 12 மாதம் மகப்பேறு விடுமுறை வழங்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Next Story