பெண் உள்பட 6 பேர் கைது
வாலிபருக்கு அரிவாள் வெட்டு தொடர்பாக பெண் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்
மதுரை,
மதுரை திடீர்நகர் மேலவாசல் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்த பெருமாள் மகன் முருகன் (வயது 20). இவர் கடந்த ஆண்டு அதே பகுதியை சேர்ந்த ஜெபராஜை (23) தாக்கி உள்ளார். அதைத்தொடர்ந்து அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று வீட்டின் முன்பு முருகன் நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த ஜெபராஜ் தலைமை யிலான ஒரு கும்பல் அவரிடம் தகராறு செய்தது. பின்னர் அந்த கும்பல் கத்தி மற்றும் அரிவாளால் முருகனை சரமாரி யாக வெட்டி விட்டு தப்பியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக திடீர்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அதே பகுதியை சேர்ந்த ஜெபராஜ், தினேஷ் (23), சிலம்பரசன் (37), பாண்டியராஜன் (45), நந்தினி (20) மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 6 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story