‘தினத்தந்தி’ புகார் பெட்டி


‘தினத்தந்தி’ புகார் பெட்டி
x
தினத்தந்தி 1 April 2022 1:31 AM IST (Updated: 1 April 2022 1:31 AM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் பதிவான மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் பதிவான மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

சுகாதார சீர்கேடு

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவில் திருமஞ்சனவீதி பகுதி சாலையோரத்தில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும், குவிந்து கிடக்கும் குப்பைகளில் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்றுநோய்கள் பரவும் அபாயம் உள்ளது. அதுமட்டுமின்றி மேற்கண்ட பகுதியில் எரிந்த நிலையில் கார் ஒன்றும் நீண்ட மாதங்களாக போக்குவரத்துக்கு இடையூறாக நிற்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் திருமஞ்சனவீதி பகுதியில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுப்பார்களா?
-பொதுமக்கள், கும்பகோணம்.

Next Story