தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டி
குழாய் சீரமைக்கப்பட்டது
மணலிக்கரை எஸ்.ஏ.தெருவில் ஆலயத்தின் பின் பகுதியில் குடிநீர் குழாய் அமைந்துள்ளது. இந்த குழாயின் அடிப்பகுதியும், நல்லியும் சேதமடைந்து குடிநீர் வீணாகியது. இதுபற்றி தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குழாயின் அடிப்பகுதி மற்றும் நல்லியையும் சீரமைத்துள்ளனர். செய்தியை வெளியிட்ட தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அந்த பகுதி மக்கள் நன்றியை தெரிவித்தனர்.
நோய் பரவும் அபாயம்
கோதநல்லூர் பேரூராட்சிக்கு உட்பட்ட சரல்விளையில் இருந்து தக்கலை செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் சரல்விளை, மருந்துக்கோட்டைக்கு இடைப்பட்ட பகுதியில் சாலையோரம் மர்ம நபர்கள் இறைச்சி கழிவுகளை சாக்கு மூடைகளில் கொட்டி வருகின்றனர். இதனால், அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தோற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையோரம் குவிந்து கிடக்கும் கழிவுகளை அகற்றி, கொட்டுபவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மேசியா, குமாரபுரம்.
தடுப்பு வேலி தேவை
நாகர்கோவில்-கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் கரியமாணிக்கபுரம் உள்ளது. இந்த பகுதியில் குடியிருப்புகள் சாலையில் இருந்து தாழ்வான பகுதியில் உள்ளன. ஆனால், இந்த பகுதியில் சாலையோரம் தடுப்பு வேலிகள் அமைக்கப்படாமல் காணப்படுகிறது. இதனால், சாலையில் செல்லும் வாகனங்கள் நிலைதடுமாறி தாழ்வான பகுதியில் கவிழ்ந்து விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சாலையோரம் விபத்து தடுப்பு வேலிகள் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சித்தார்த்தன், வடக்குதாமரைகுளம்.
கால்வாயை தூர்வார வேண்டும்
அழகப்பபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட திருமூலநகர் முதல் அழகப்பபுரம் செங்குளம் வரையும், அழகப்பபுரம் தெப்பகுளம் முதல் செங்குளம் வரை செல்லும் பாசன கால்வாய் உள்ளது. இந்த கால்வாய்களில் செடிகள் வளர்ந்தும், கழிவுகள், குப்பைகள் தேங்கி காணப்படுகிறது. இதனால், அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே, கால்வாயை தூர்வாரி தண்ணீர் வடிந்தோட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஜெஸ்டின், அழகப்பபுரம்.
சாலை சீரமைக்கப்படுமா?
நுள்ளிவிளை, கட்டிமாங்கோடு ஊராட்சிகளை பிரிக்கும் பகுதியில் வெட்டுவிளை உள்ளது. இந்த பகுதியில் உள்ள சாலையில் ஜல்லிகள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாவதுடன் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகிறார்கள். எனவே, சேதமடைந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அனுஷ்கா ஷைஜி, வெட்டுவிளை.
Related Tags :
Next Story