ஈரோட்டில் தொடர்ந்து பெட்ரோல்- டீசல் விலை உயர்வு


ஈரோட்டில் தொடர்ந்து பெட்ரோல்- டீசல் விலை உயர்வு
x
தினத்தந்தி 1 April 2022 2:12 AM IST (Updated: 1 April 2022 2:12 AM IST)
t-max-icont-min-icon

ஈரோட்டில் தொடர்ந்து பெட்ரோல்- டீசல் விலை உயர்ந்தது.

ஈரோடு
ஈரோட்டில் நேற்று முன்தினம் ஒரு லிட்டர் பெட்ரோல் 107 ரூபாய் 18 காசுக்கு விற்பனையானது. நேற்று மேலும் 75 காசுகள் உயர்ந்து வரலாறு காணாத வகையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 107 ரூபாய் 93 காசுக்கு விற்பனையானது. இதேபோல் நேற்று முன்தினம் ஒரு லிட்டர் டீசல் 97 ரூபாய் 26 காசுக்கு விற்பனையானது. நேற்று மேலும் 76 காசுகள் உயர்ந்து 98 ரூபாய் 2 காசுக்கு விற்பனை ஆனது.
தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருவதால் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருவதால் இதன் தாக்கம் எதிரொலியாக மற்ற பொருட்களின் விலையும் உயர்ந்து வருகிறது. இதனால் ஏழை, நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

Next Story