ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட இடத்தில் பூங்கா அமைக்க வேண்டுகோள்
ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட இடத்தில் பூங்கா அமைக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
செந்துறை:
அரியலூர் மாவட்டம் செந்துறை தாலுகா அலுவலகம் செல்லும் வழியில் உள்ள பெரிய ஏரியின் கரை மற்றும் வரத்து வாய்க்கால்களில் கடந்த 40 ஆண்டுகளாக ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த குடியிருப்புகள் மற்றும் சிறு தொழில் நிறுவனங்களை வருவாய்த் துறையினர் மற்றும் பொதுப்பணித் துறையினர் இணைந்து அகற்றினர். ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட இடங்கள் பாழடைந்த பகுதிகள் போல் காட்சி அளிக்கிறது. எனவே கட்டிட இடிபாடுகளை அகற்றி இந்த இடத்தை செந்துறை பகுதி மக்கள் அனைவரும் பயன்படுத்தும் வகையில் பூங்கா அமைக்க வேண்டும் என்று செந்துறை பகுதி மக்கள், மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story