மின்கம்பங்களில் இடையூறாக கட்டப்பட்டுள்ள கேபிள் வயர்கள், விளம்பர பதாகைகளை அகற்ற வலியுறுத்தல்


மின்கம்பங்களில் இடையூறாக கட்டப்பட்டுள்ள கேபிள் வயர்கள், விளம்பர பதாகைகளை அகற்ற வலியுறுத்தல்
x

மின்கம்பங்களில் இடையூறாக கட்டப்பட்டுள்ள கேபிள் வயர்கள், விளம்பர பதாகைகளை அகற்ற வலியுறுத்தப்பட்டுள்ளது.

அரியலூர்:
அரியலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து ஊர்களிலும் உள்ள மின்கம்பங்கள் மற்றும் மின்பாதைகளில் இடையூறாக கேபிள் வயர்கள் மற்றும் விளம்பர பதாகைகள் கட்டப்பட்டுள்ளது. இதனால் மின்வாரிய பணியாளர்கள் மின்தடை பராமரிப்பு பணி மற்றும் எரியிழை சரி செய்யும் பணியை மேற்கொள்ளும்போது மின்கம்பத்தில் கட்டப்பட்டுள்ள கேபிள் வயர்கள், விளம்பர பதாகைகள் காலில் சிக்கி விபத்து ஏற்படும் சூழ்நிலை உள்ளது. எனவே விபத்தினை தவிர்க்கும் பொருட்டு மின்பாதைகள், மின்கம்பங்களில் உள்ள கேபிள் வயர்கள், விளம்பர பதாகைகளை உடனடியாக அகற்ற வேண்டும். மேலும் இறுதி ஊர்வலங்களில் வீசப்படும் மாலைகளின் அதிர்வினால் மின்கம்பிகள் ஒன்றுடன் ஒன்று பின்னிக்கொண்டு அறுந்து விபத்து ஏற்படும் சூழ்நிலை ஏற்படுகிறது. மேலும் அடிக்கடி மின்தடை ஏற்படுவதோடு மின்மாற்றிகளில் பழுது ஏற்படுகிறது. எனவே பொதுமக்கள் இறுதி ஊர்வலங்களில் மாலைகளை மின்கம்பிகள் மீது வீசாமல் கவனமுடன் செயல்பட வேண்டும்.
இந்த தகவலை அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமணசரஸ்வதி வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Next Story