3 நாட்கள் வேலை நிறுத்தம்


3 நாட்கள் வேலை நிறுத்தம்
x
தினத்தந்தி 1 April 2022 2:15 AM IST (Updated: 1 April 2022 2:15 AM IST)
t-max-icont-min-icon

3 நாட்கள் வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

மதுரை. 
அகில இந்திய அளவில் போர்வெல் லாரி உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள், ஏஜெண்டுகள் சங்கங்கள் சார்பில் மதுரை வேலைநிறுத்த போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தில் மதுரை மாவட்டம் போர்வெல் ஊழியர்கள் மற்றும் ஏஜெண்டுகள் சங்கத்தினர் டீசல் மற்றும் உதிரி பொருட்கள் விலை உயர்வை கண்டித்தும், உடனடியாக விலையை குறைக்க கோரியும் 3 நாட்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் முதல் நாளான நேற்று மதுரை மாநகர் மாவட்ட போர்வெல் லாரி உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் சங்கங்கள் சார்பில் பாண்டி கோவில் அருகே போர்வெல் லாரிகளை நிறுத்தி போராட்டம் நடந்தது. முன்னதாக சங்க நிர்வாகிகள் அனைவரும் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டபடி ஆர்ப்பாட்டம் செய்தனர். தொடர்ந்து ஏப்ரல் மாதம் 2-ந் தேதி வரை இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். எனவே எங்கள் நியாயமான போராட்டம் வெற்றி பெற பொதுமக்களும், விவசாய பெருமக்கள் ஆதரவு தரும்படி சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Next Story