தாளவாடியில் வீட்டில் பதுக்கி வைத்த 35 கிலோ சந்தன கட்டை - நாட்டுதுப்பாக்கி பறிமுதல்


தாளவாடியில் வீட்டில் பதுக்கி வைத்த 35 கிலோ சந்தன கட்டை - நாட்டுதுப்பாக்கி பறிமுதல்
x
தினத்தந்தி 1 April 2022 2:40 AM IST (Updated: 1 April 2022 2:40 AM IST)
t-max-icont-min-icon

தாளவாடியில் வீட்டில் பதுக்கி வைத்த 35 கிலோ சந்தன கட்டை - நாட்டுதுப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.

தாளவாடி
தாளவாடி நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சந்தன மர கட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாக தாளவாடி வனச்சரகர் சதீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து வனத்துறையினர் அங்கு விரைந்து சென்றனர்.
வனத்துறையினரை பார்த் ததும் அங்கிருந்த 2 பேர் தப்பித்து ஓடினார்கள். பின்னர் வீட்டை சோதனையிட்டபோது அங்கு 35 கிலோ எடை கொண்ட சந்தன மர கட்டைகள், நாட்டுத்துப்பாக்கி, துப்பாக்கி மருந்து, கோடாரி போன்றவை பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து வனத்துறையினர் அவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி  ஓடிய 2 பேரை வனத்துறையினர் தேடி வருகின்றனர். இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story