சிறுமி என்பதால் பெண்ணின் பெற்றோர் திருமணத்திற்கு மறுப்பு; தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை


சிறுமி என்பதால் பெண்ணின் பெற்றோர் திருமணத்திற்கு மறுப்பு; தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
x
தினத்தந்தி 1 April 2022 2:56 AM IST (Updated: 1 April 2022 2:56 AM IST)
t-max-icont-min-icon

சிக்கமகளூரு அருகே மைனர் பெண் என்பதால் பெண்ணின் பெற்றோர் திருமணத்திற்கு மறுத்ததால் மனமுடைந்து வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது.

சிக்கமகளூரு: சிக்கமகளூரு அருகே மைனர் பெண் என்பதால் பெண்ணின் பெற்றோர் திருமணத்திற்கு மறுத்ததால் மனமுடைந்து வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது. 

 காதல்

சிக்கமகளூரு மாவட்டம் என்.ஆர்.புரா தாலுகா தாவானா கிராமத்தை சேர்ந்தவர் கிஷோர் குமார்(வயது 24). தொழிலாளியான குமாருக்கு, அதேபகுதியை சேர்ந்த 17 வயது மைனர் பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் உயிருக்கு, உயிராக காதலித்து வந்தனர். இதையடுத்து குமார், பெற்றோரிடம் காதல் விஷயத்தை கூறி திருமணம் செய்து வைக்கும்படி கூறியுள்ளார். 

இதற்கு பெற்றோரும் சம்மதம் தெரிவித்து பெண்ணின் வீட்டிற்கு சென்று நடந்த விஷயத்தை கூறி பெண் கேட்டுள்ளனர். ஆனால் பெண்ணின் பெற்றோர், எங்களது மகளுக்கு 17 வயது தான் ஆகிறது, அதனால் தற்போது திருமணம் செய்து வைக்க முடியாது, ஓராண்டு கழித்த பிறகு திருமணம் செய்து வைக்க சம்மதம் தெரிவித்ததாக தெரிகிறது. இதனால் கிஷோர் குமார் மனமுடைந்து உள்ளார். 

 தூக்குப்போட்டு தற்கொலை

இந்த நிலையில் நேற்றுமுன்தினம் மாலை அதேப்பகுதியில் உள்ள வனப்பகுதிக்கு சென்று கிஷோர் குமார் மரத்தில் துண்டால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்த என்.ஆர். புரா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் கிஷோர் குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

விசாரணையில், மைனர் பெண் என்பதால் திருமணத்திற்கு பெண்ணின் பெற்றோர் மறுத்ததால் மனமுடைந்து கிஷோர் குமார் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து என்.ஆர்.புரா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story