பங்குனி அமாவாசையையொட்டி உழவர் சந்தைகளில் ரூ.58 லட்சத்துக்கு காய்கறிகள், பழங்கள் விற்பனை
சேலம் மாவட்டத்தில் பங்குனி அமாவாசையையொட்டி உழவர் சந்தைகளில் நேற்று ரூ.58 லட்சத்துக்கு காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனை செய்யப்பட்டன.
சேலம்,
பங்குனி அமாவாசை
சேலம் மாவட்டத்தில் எடப்பாடி, ஆத்தூர், மேட்டூர், ஜலகண்டாபுரம், இளம்பிள்ளை, தம்மம்பட்டி, ஆட்டையாம்பட்டி, தாதகாப்பட்டி, அம்மாபேட்டை, அஸ்தம்பட்டி, சூரமங்கலம் ஆகிய 11 உழவர் சந்தைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த உழவர் சந்தைகளில் வழக்கமாக நாட்களில் நடக்கும் வியாபாரத்தை விட அமாவாசை நாட்களில் கூடுதலாக காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனை செய்யப்படும்.
அதன்படி, நேற்று பங்குனி அமாவாசையையொட்டி 11 உழவர் சந்தைகளிலும் விவசாயிகள் அதிகளவு காய்கறிகளை விற்பனைக்காக கொண்டு வந்தனர். குறிப்பாக அகத்திகீரை, பூசணிக்காய், கத்திரிக்காய், வெண்டை, அவரை, வாழைப்பழம், வாழை இலை உள்ளிட்டவைகளை பொதுமக்கள் வாங்கி சென்றனர்.
ரூ.58 லட்சத்துக்கு விற்பனை
இதுகுறித்து வேளாண் விற்பனை அதிகாரிகள் கூறும் போது, பங்குனி அமாவாசையையொட்டி இன்று (நேற்று) மாவட்டத்தில் உள்ள 11 உழவர் சந்தைகளுக்கும் 1,009 விவசாயிகள் மொத்தம் 243 டன் காய்கறிகள் மற்றும் பழங்கள் கொண்டு வந்தனர். அவைகள் ரூ.58 லட்சத்து 5 ஆயிரத்து 618-க்கு விற்பனை செய்யப்பட்டன. உழவர் சந்தைக்கு மட்டும் 52 ஆயிரத்து 796 நுகர்வோர்கள் வந்து பொருட்களை வாங்கி சென்றதாகவும் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story