வழிப்பறி வழக்கில் கைதானவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


வழிப்பறி வழக்கில் கைதானவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x
தினத்தந்தி 1 April 2022 7:10 PM IST (Updated: 1 April 2022 7:10 PM IST)
t-max-icont-min-icon

விளாத்திகுளம் அருகே வழிப்பறி வழக்கில் கைதானவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

தூத்துக்குடி:
விளாத்திகுளம் அருகே குமாரரெட்டியார்புரம் என்ற பட்டியூரை சேர்ந்தவர் கதிரேசன். இவருடைய மகன் ரமேஷ்குமார் (வயது 38). இவரை விளாத்திகுளம் போலீசார் வழிப்பறி வழக்கில் கைது செய்து, பாளையங்கோட்டை ஜெயிலில் அடைத்தனர். 
இந்த நிலையில் ரமேஷ்குமாரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பரிந்துரை செய்தார். அதை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் ஏற்று, ரமேஷ்குமாரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இந்த உத்தரவு நகலை விளாத்திகுளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் இளவரசு பாளையங்கோட்டை ஜெயிலில் வழங்கினார்.

Next Story