அம்பலூர் ஊராட்சியில் வளர்ச்சித் திட்ட பணிகளை அதிகாரிகள் ஆய்வு
அம்பலூர் ஊராட்சியில் நடைபெறும் வளர்ச்சித் திட்ட பணிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
வாணியம்பாடி
வாணியம்பாடி அருகே உள்ள நாட்டறம்பள்ளி ஒன்றியத்திற்கு உட்பட்ட அம்பலூர் ஊராட்சியில் கட்டப்பட்டு வரும் தொகுப்பு வீடுகளை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தினகரன், ரகுராம் ஆகியோர் ஆய்வு செய்தனர். அப்போது பணிகளை துரிதமாக முடிக்க அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.
முன்னதாக 2022-2023-ம் ஆண்டுக்கான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணிகள் தொடங்கப்பட்டது. நாட்றம்பள்ளி ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கோவிந்தசாமி தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் ஏ.பி.முருகேசன் பணிகளை தொடங்கி வைத்தார்.
Related Tags :
Next Story