உயர் மின்கோபுரங்களை மேம்படுத்தும் பணி
உயர் மின்கோபுரங்களை மேம்படுத்தும் பணி
உடுமலை அருகே முன்னறிவிப்பில்லாமல் உயர் மின் கோபுரங்களை மேம்படுத்தும் பணி நடைபெறுவதால் தென்னை மரங்கள் சேதமடைவதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
மின் கோபுரங்கள்
உடுமலை வழியாக ஆழியார் நவமலை பகுதி வரை உயர் மின் கோபுரங்கள் மூலம் அமைக்கப்பட்ட மின் வழித்தடம் உள்ளது. இந்த வழித்தடத்தில் 140 உயர் மின் கோபுரங்கள் உள்ளன.
இதில் 110 கே.வி. மின்சாரம் பயன்பாட்டில் உள்ள நிலையில் அதனை 220 கே. வி. யாக மாற்றும் பணிகள் மற்றும் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகிறது.மின் கட்டுமானக் கழகம் மூலம் மேற்கொள்ளப்படும் இந்த பணிகள் குறித்து விவசாயிகளுக்கு எந்த முன்னறிவிப்பும் வழங்கவில்லை என்று கூறுப்படுகிறது.
பயிர்கள் சேதம்
தற்போது பல இடங்களில் உயர் மின் கோபுரங்களின் அளவு பெரிதாக்கப்படுகிறது. இதனால் விவசாயிகளின் தென்னை உள்ளிட்ட நிலைப் பயிர்கள் சேதமடையும் நிலை உள்ளது.சேதமடையும் பயிகளுக்காக இழப்பீடு மற்றும் கூடுதல் நிலம் எடுப்பதற்காக விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை.
உயர் மின் அழுத்தம் பாயும் மின் கம்பிகளுக்குக் கீழே தொடர்ச்சியாக பணியாற்றும் விவசாயிகளுக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுவதாக விவசாயிகளிடம் அச்ச உணர்வு உள்ளது.இந்தநிலையில் முன்னறிவிப்பு எதுவும் வழங்கப்படாமல் மேற்கொள்ளப்படும் மேம்பாட்டுப் பணிகளால் உடுமலையையடுத்த கணபதிபாளையம், பூலாங்கிணறு, முக்கோணம், அந்தியூர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே இந்த பணிகளை முறையாக ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்'என்று விவசாயிகள் கூறினர்.
Related Tags :
Next Story