சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி


சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
x
தினத்தந்தி 1 April 2022 8:16 PM IST (Updated: 1 April 2022 8:16 PM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் வட்டார போக்குவரத்து துறை சார்பில், சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

திருவள்ளூர் ராஜாஜி சாலையில் அமைந்துள்ள மேல்நிலைப்பள்ளியில் திருவள்ளூர் வட்டார போக்குவரத்து துறை சார்பில், சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சி பள்ளியின் தலைமை ஆசிரியர் தலைமையில் நடைப்பெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் மோட்டார் வாகன சூப்பிரண்டு பன்னீர்செல்வம் கலந்துகொண்டு சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

இந்த நிகழ்ச்சியின்போது சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து குறும்படம் காண்பிக்கப்பட்டது. இதில் 400-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தின் முடிவில் மாணவ, மாணவிகள் சாலை பாதுகாப்பு குறித்து உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.


Next Story