கோத்தகிரியில் கோர்ட்டு கட்டப்படும் இடங்களில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஆய்வு


கோத்தகிரியில் கோர்ட்டு கட்டப்படும் இடங்களில்  சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஆய்வு
x
தினத்தந்தி 1 April 2022 8:48 PM IST (Updated: 1 April 2022 8:48 PM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரியில் கோர்ட்டு கட்டப்படும் இடங்களில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஆய்வு செய்தார்.

கோத்தகிரி

கோத்தகிரியில் உள்ள தாசில்தார் அலுவலக கட்டிடத்தின் தரைத்தளத்தில், போதுமான இடவசதி இல்லாத குறுகிய கட்டிடத்தில் நீலகிரி மாவட்ட குற்றவியல் மற்றும் உரிமையியல் நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து நீதிமன்றத்திற்கு அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என வக்கீல்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து நீலகிரி மாவட்ட நீதிபதி சஞ்சய் பாபா கோத்தகிரிக்கு வந்து கோர்ட்டு கட்டிடம் கட்ட வருவாய்த்துறை சார்பில் பரிந்துரைக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்தார். இந்தநிலையில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதி சேஷாயி  கோத்தகிரிக்கு வந்தார். பின்னர் புதிய கோர்ட்டு கட்டிடம் கட்ட தேர்வு செய்யப்பட்ட கோத்தகிரி சக்திமலை பகுதி மற்றும் எஸ்.கைகாட்டி பகுதிகளில் உள்ள நிலங்களை ஆய்வு செய்தார். மேலும் நிலங்களின் பரப்பளவு உள்ளிட்ட விபரங்களைக் குன்னூர் உதவி கலெக்டர் தீபனா விஸ்வேஸ்வரி, தாசில்தார் காயத்ரி ஆகியோரிடம் கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது நீலகிரி மாவட்ட நீதிபதி சாய்பாபா குன்னூர் சார்பு நீதிமன்ற நீதிபதி லிங்கம் இலவச சட்ட மைய நீதிபதி ஸ்ரீதரன் கோத்தகிரி குற்றவியல் மற்றும் உரிமையியல் நீதிமன்ற மாஜிஸ்திரேட்டு ஜெயபிரகாஷ் உள்பட கோர்ட் அதிகாரிகள், போலீசார், வக்கீல்கள் மற்றும் வருவாய்த்துறையினர் உடனிருந்தனர்.

Next Story