ஒவ்வொரு வீட்டிற்கும் கொண்டு சேர்க்க வேண்டும்


ஒவ்வொரு வீட்டிற்கும் கொண்டு சேர்க்க வேண்டும்
x
தினத்தந்தி 1 April 2022 8:53 PM IST (Updated: 1 April 2022 8:53 PM IST)
t-max-icont-min-icon

ஊட்டச்சத்து-ஆரோக்கியம் சம்பந்தமான கருத்துகளை ஒவ்வொரு வீட்டிற்கும் கொண்டு சேர்க்க வேண்டும் என திருவாரூர் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் கூறினார்.

திருவாரூர்:
ஊட்டச்சத்து-ஆரோக்கியம் சம்பந்தமான கருத்துகளை ஒவ்வொரு வீட்டிற்கும் கொண்டு சேர்க்க வேண்டும் என திருவாரூர் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் கூறினார்.
புத்தாக்க பயிற்சி 
திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கான புத்தாக்க பயிற்சி முகாம் நடந்தது. முகாமிற்கு பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். முகாமை மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
குழந்தை ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத ஆரோக்கியமான நிலையினை அடைய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம் சம்பந்தமான கருத்துகளை ஒவ்வொரு வீட்டிற்கும் கொண்டு சேர்க்க  வேண்டும். 
கண்காட்சி 
அங்கன்வாடி மையங்களிலும் அனைத்து குழந்தைகளின் உயரம் மற்றும் எடையினை கணக்கீட்டு குறைப்பாடுகளுடைய குழந்தைகளை ஆஸ்பத்திரிக்கு பரிந்துரை செய்ததன் விளைவாக அரசின் கணக்கீட்டின்படி குள்ளதன்மை குறையுடைய குழந்தைகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. அதேபோல்  எடை குறையுடைய குழந்தைகளின் எண்ணிக்கையும் வெகுவாக குறைந்துள்ளது.
இவ்வாறு கலெக்டர் கூறினார்.
அதனை தொடர்ந்து ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகளின் சார்பில் குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து உணவுகள், அரசின் திட்டங்கள் தொடர்பாக காட்சிப்படுத்தப்பட்ட கண்காட்சியினை கலெக்டர் பார்வையிட்டார்.
உறுதிமொழி 
முன்னதாக ஆரோக்கியமான தமிழகத்தை உருவாக்க வேண்டும் என உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் ராஜராஜன், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் கலியபெருமாள், ஒன்றியக்குழு தலைவர் தேவா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story