பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை


பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை
x
தினத்தந்தி 1 April 2022 9:41 PM IST (Updated: 1 April 2022 9:41 PM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் பெட்ரோல், டீசல் விலை கிடுகிடுவென உயர்ந்த நிலையில் இன்று மாற்றமில்லாமல் இருந்தது.

பெங்களூரு:

நாடு முழுவதும் 137 நாட்களுக்கு பிறகு கடந்த மாதம் (மார்ச்) 22-ந் தேதி பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் ஏற்பட்டது. இதற்கு உக்ரைன்-ரஷியா போர் காரணம் எனக் கூறப்படுகிறது. கர்நாடகத்தில் அன்றைய தினம் பெட்ேரால் ஒரு லிட்டர் ரூ.101.42-ஆகவும், டீசலின் விலை ரூ.85.50-ஆகவும் இருந்தது. அன்று முதல் கிடுகிடுவென உயர்ந்த நிலையில் 24-ந்தேதி பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படவில்லை.

  அதுபோல் 2-வது முறையாக நேற்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றமில்லாமல் இருந்தது. பெங்களூருவில் தொடர்ந்து 7 தினங்களாக ஏறுமுகத்தில் இருந்த பெட்ரோலில் விலை ரூ.107.30-ஆகவும், டீசலின் விலை ரூ.91.27-ஆகவும் நேற்று மாற்றம் இன்றி நீடித்தது. இதனால் வாகன ஓட்டிகள் சிறிது மனநிம்மதி அடைந்துள்ளனர்.

Next Story