‘தினத்தந்தி’ புகார் பெட்டி


‘தினத்தந்தி’ புகார் பெட்டி
x
தினத்தந்தி 1 April 2022 10:09 PM IST (Updated: 1 April 2022 10:09 PM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
விபத்தில் சிக்கும் வாகனங்கள்
பழனி கவுண்டர் இட்டேரி ரோட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சாக்கடை கால்வாய் அமைப்பதற்காக குழி தோண்டப்பட்டது. அப்போது அங்கு ஏற்கனவே இருந்த கால்வாயின் கட்டுமான சுவர்கள் இடிக்கப்பட்டு சாலையோரத்திலேயே கொட்டப்பட்டன. தற்போது வரை அவை அகற்றப்படவில்லை. இதனால் இரவில் அந்த வழியாக இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் விபத்தில் சிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. இதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-முத்து, பழனி.
அகற்றப்படாத குப்பைகள்
கம்பம் 29-வது வார்டு வனச்சரகர் அலுவலக சாலையோரத்தில் கொட்டப்படும் குப்பைகள் அகற்றப்படாமல் உள்ளது. இங்கு சேகரமாகும் குப்பைகள் அப்பகுதியில் உள்ள சாக்கடை கால்வாயிலும் விழுந்து அடைப்பு ஏற்படுத்துகிறது. இதனால் கால்வாயில் கழிவுநீர் தேங்குவதுடன் சுகாதாரக்கேடும் ஏற்பட்டுள்ளது. எனவே குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-முருகேசன், கம்பம்.
அங்கன்வாடி மைய கட்டிடம் சேதம்
கம்பம் உழவர் சந்தைக்கு அருகில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இதற்கான கட்டிடம் உரிய பராமரிப்பு இல்லாததால் சேதமடைந்த நிலையில் உள்ளது. கட்டிடத்தின் பல்வேறு இடங்களில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழத்தொடங்கியுள்ளன. எனவே கட்டிடத்தை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வரவேண்டும்.
-ஜானி, கம்பம்.
வேகத்தடை வேண்டும்
பழனி ஆர்.எப்.ரோட்டில் பெரியார்சிலை சந்திப்பு பகுதியில் வேகத்தடை அமைக்கப்படவில்லை. இதனால் அப்பகுதியில் அதிவேகமாக செல்லும் வாகனங்களால் விபத்துகள் ஏற்படுகிறது. எனவே வேகத்தடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பாலன், பழனி.

Next Story