சிதம்பரத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்பு அடுக்குமாடி வீடுகள் இடித்து அகற்றம்


சிதம்பரத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்பு அடுக்குமாடி வீடுகள் இடித்து அகற்றம்
x
தினத்தந்தி 1 April 2022 10:34 PM IST (Updated: 1 April 2022 10:34 PM IST)
t-max-icont-min-icon

சிதம்பரத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்பு அடுக்குமாடி வீடுகள் இடித்து அகற்றம்


சிதம்பரம்

நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு

சிதம்பரம் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் தச்சன் குளம், ஓமக்குளம், ஞானபிரகாசம் குளம், நாகச்சேரி குளம் உள்பட 27 குளங்கள் உள்ளது. இந்த நீர்நிலை பகுதிகளில் பலர் ஆக்கிரமித்து வீடு கட்டி வசித்து வருகிறார்கள். இந்நிலையில் கோர்ட்டு உத்தரவுபடி, நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகளை இடித்தும் அகற்றும் பணி சிதம்பரத்தில் தொடர்ந்து நடந்து வருகிறது. அந்த வகையில் சிதம்பரம் பஸ் நிலையத்துக்கு பின்புறம் உள்ள குமரன் குளத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த வீடுகளை இடிக்க அதிகாரிகள் முடிவு செய்தனர். இதற்காக அங்கு வசித்த மக்களுக்கு நோட்டீசு வழங்கப்பட்டு, அவர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.

பொக்லைன் மூலம் இடித்தனர்

 இதைத் தொடர்ந்து நேற்று வீடுகள் இடிக்கும் பணி நடைபெற்றது. நகராட்சி ஆணையாளர் அஜிதா பர்வீன் உத்தரவின்பேரில், நகராட்சி அதிகாரிகள் வீடுகளை இடித்து அகற்றும் பணியில் ஈடுபட்டனர். 
அதன்படி 18-க்கும் மேற்பட்ட அடுக்குமாடி வீடுகள், கூரை வீடுகள் மற்றும் கடைகள் போன்றவற்றை பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றினர். முன்னதாக அங்கு அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நிகழாமல் தடுக்கும் வகையில் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். 

நடவடிக்கை தொடரும்

இதேபோன்று மேலும் நகராட்சி பகுதியில் உள்ள நீர்நிலைகளில் ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருக்கும் வீடுகள் குறித்த கணக்கெடுப்பு நடந்து வருவதாவும், விரைவில் அந்த வீடுகளும் இடித்து அகற்றப்பட உள்ளது. என்றும் ஆகையால் நகராட்சியில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடர்ந்து நடைபெறும் என்று நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். 


Next Story