ஆபத்தை உணராத மாணவர்கள்


ஆபத்தை உணராத மாணவர்கள்
x

பாகாயத்தில் இருந்து காட்பாடி செல்லும் அரசு பஸ் ஒன்றில் இருபக்க படிக்கட்டிலும் மாணவர்கள் தொங்கியபடி செல்லும் காட்சி

வேலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் செல்லும் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் பள்ளி மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியவாறே பயணித்து வருகின்றனர். இவற்றை தடுக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனாலும் மாணவர்கள் ஒரு சிலர் ஆபத்தை உணராமல் பஸ் படிக்கட்டில் தொங்கியவாறு பயணிக்கின்றனர். வேலூர் அண்ணா சாலையில் நேற்று பாகாயத்தில் இருந்து காட்பாடி செல்லும் அரசு பஸ் ஒன்றில் இருபக்க படிக்கட்டிலும் மாணவர்கள் தொங்கியபடி செல்வதை படத்தில் காணலாம்.

Next Story