மாட்டுவண்டி தொழிலாளர்கள் போராட்டம் குறித்து அமைதி பேச்சுவார்த்தை
மாட்டுவண்டி தொழிலாளர்கள் போராட்டம் குறித்து அமைதி பேச்சுவார்த்தை நடந்தது.
கிருஷ்ணராயபுரம்,
கரூர் மாவட்ட பாரதிய மாட்டுவண்டி தொழிலாளர்கள் சங்கம் சார்பாக காவிரி ஆற்றில் மாட்டு வண்டியில் மணல் அள்ள அனுமதிகோரி லாலாபேட்டை காவிரியாற்றில் குடியேறும் போராட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனர். இதுதொடர்பாக அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் கிருஷ்ணராயபுரம் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு தாசில்தார் யசோதா தலைமை தாங்கினார். உதவி செயற்பொறியாளர் (கனிமம்) பிச்சமுத்து, லாலாபேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகந்தி ஆகியோர் முன்னிலை வைத்தனர். கூட்டத்தில், மாநில சுற்றுச்சூழல் மதிப்பீட்டு ஆணையத்திடம் அனுமதி கேட்டு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. அனுமதி ஆணை வந்தவுடன் காவிரியாற்றில் மாட்டு வண்டிகளுக்கு மணல் எடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் மாட்டுவண்டி தொழிலாளர்கள் அடுத்தக்கட்ட போராட்டத்திற்கு தயாராகி வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story