மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்


கரூர்
x
கரூர்
தினத்தந்தி 1 April 2022 10:52 PM IST (Updated: 1 April 2022 10:52 PM IST)
t-max-icont-min-icon

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

கரூர், 
கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் பார்வைத்திறன் குறைபாடு உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியில் பார்வைத்திறன் குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பஸ் பயண அட்டைகள், ஊன்றுகோல் மற்றும் கண் கண்ணாடி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதில் ஏராளமான மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை பெற்றுக் கொண்டனர்.

Next Story