மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான செயல்பாடுகள் குறித்து ஆலோசனை
மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான செயல்பாடுகள் குறித்து ஆலோசனை நடைபெற்றது.
வளவனூர்,
மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்காக அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் இணைந்து மேற்கொள்ளவேண்டிய செயல்பாடுகள், தொண்டு குறித்த ஆலோசனை கூட்டம் விழுப்புரம் சைல்டு லைன் திட்டத்தின் மைய நிறுவனம் பவ்டாவில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பவ்டா இயக்குனர் பிரபலா ஜே.ராஸ் தலைமை தாங்கினார். பவ்டா திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆரோக்கியசாமி வரவேற்றார். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தங்கவேல், மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு செயல்படுத்தும் திட்டங்கள் குறித்து பேசினார். விழுப்புரம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா, மாவட்ட குழந்தைகள் நல குழுமம் தலைவர் சசிகுமார், உறுப்பினர் லூயிஸ் சேவியர் ஆகியோர் குழந்தைகளுக்கு உதவுவது குறித்து பேசினார்.
விழுப்புரம் சிறார் நீதி குழுமத்தின் உறுப்பினர் அமுதமொழி, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் தமிழ்செல்வி ஆகியோர் குழந்தைகளுக்கு நேரிடும் பல்வேறு பிரச்சினைகள் குறித்தும், அதை தடுப்பது குறித்தும் பேசினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சைல்டு லைன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜோசப் அலெக்சிஸ் செய்திருந்தார்.
Related Tags :
Next Story