வேலூரில் கணவன் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் சாவு


வேலூரில்  கணவன் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் சாவு
x
தினத்தந்தி 1 April 2022 11:27 PM IST (Updated: 1 April 2022 11:27 PM IST)
t-max-icont-min-icon

வேலூரில் கணவன் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

வேலூர்

வேலூர் சேண்பாக்கத்தை சேர்ந்தவர் குணாளன். ஓய்வுபெற்ற மாவட்ட வருவாய் அலுவலர். இவரது மனைவி எழிலரசி. இவர்களுக்கு மணிமாறன், புகழேந்தி என்ற 2 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு குணாளனுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவர் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை 2 மணியளவில் உயிரிழந்தார்.

 இதுகுறித்து அவரது மனைவிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. அவரையும் அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி அவரும் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வேலூர் வடக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கணவன் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story