போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசு
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பரிசு வழங்கினார்.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 200-க்கும் மேற்பட்ட உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 9-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு ஒருங்கிணைந்த பள்ளி கல்வித் துறை மூலம் கடந்த ஜனவரி மாதம் ஆன்லைன் மூலம் அடிப்படை வினாடி- வினா மற்றும் முழு ஆளுமை திறன் போட்டி நடத்தப்பட்டது. இதில் முழு ஆளுமை திறன் போட்டியில் சிறப்பாக செயல்பட்ட 7 மாணவ -மாணவிகளுக்கு ரூ.3,000 மதிப்புள்ள பரிசு பொருட்கள், வினாடி-வினா போட்டியில் வெற்றிபெற்ற 120 மாணவ -மாணவிகளுக்கு ரூ.2000 மதிப்புள்ள பரிசுப் பொருட்கள் வழங்கும் விழா மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்தது.
கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கி, வெற்றி பெற்ற மாணவ -மாணவிகளுக்கு பரிசு பொருட்களை வழங்கி பாராட்டினார். விழாவில் முதன்மை கல்வி அலுவலர் உஷா, உதவி திட்ட அலுவலர்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story