பணம் வைத்து சூதாடிய 9 பேர் கைது
பணம் வைத்து சூதாடிய 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
தரகம்பட்டி,
கடவூர் வட்டம், சிந்தாமணிப்பட்டி போலீஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது குறுணிகுளத்துப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி பழைய கட்டிடத்தில் வெவ்வேறு இடங்களில் பணம் வைத்து சூதாடியதாக குறுணிகுளத்துப்பட்டியை சேர்ந்த உபயதுல்லா, காதர்அலி, பாபு, சிந்தாமணிப்பட்டியை சேர்ந்த ரவிக்குமார், உப்பாநத்தத்தை சேர்ந்த கார்த்திக், வெங்கமேட்டை சேர்ந்த ராதாகிருஷ்ணன், தரகம்பட்டியை சேர்ந்த ராஜா, அருள், மணிகண்டன் ஆகிய 9 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவர்களிடமிருந்து மொத்தம் ரூ.4,520 பறிமுதல் செய்யப்பட்டன.
Related Tags :
Next Story