ஓசூரில் பெண்ணை அரிவாளால் வெட்டியவர் கைது
ஓசூரில் பெண்ணை அரிவாளால் வெட்டியவர் கைது செய்யப்பட்டார்.
ஓசூர்:
ஓசூர் அருகே பேகேப்பள்ளியை சேர்ந்த முனிராஜ் என்பவரது மனைவி நாகரத்தினா (வயது41). இவருடைய வீட்டில், கடந்த 6 மாதத்துக்கு முன்பு, சேலத்தை சேர்ந்த சசிகுமார் குடியேறினார். சமீபத்தில் வீடு காலி செய்துவிட்டு வேறு ஒரு இடத்திற்கு சென்றுவிட்டார். இதனை தொடர்ந்து, தனது அட்வான்ஸ் பணத்தை பெற்றுச்செல்ல வீட்டு உரிமையாளர் நாகரத்தினா வீட்டிற்கு வந்து அட்வான்ஸ் பணத்தை கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த சசிகுமார் கையில் வைத்திருந்த அரிவாளால் நாகரத்தினாவை வெட்டினார். அதில் காயமடைந்த நாகரத்தினா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் அளித்த புகாரின் பேரில் சிப்காட் போலீசார் சசிகுமாரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story