மோட்டார் சைக்கிள் மீது டேங்கர் லாரி மோதல் கணவன் கண் முன்னே புதுப்பெண் சாவு


மோட்டார் சைக்கிள் மீது டேங்கர் லாரி மோதல் கணவன் கண் முன்னே புதுப்பெண் சாவு
x
தினத்தந்தி 1 April 2022 11:50 PM IST (Updated: 1 April 2022 11:50 PM IST)
t-max-icont-min-icon

காரிமங்கலம் அருகே மோட்டார் சைக்கிள் மீது டேங்கர் லாரி மோதிய விபத்தில் கணவன் கண் முன்னே புதுப்பெண் பரிதாபமாக இறந்தார்.

காரிமங்கலம்:
காரிமங்கலம் அருகே மோட்டார் சைக்கிள் மீது டேங்கர் லாரி மோதிய விபத்தில் கணவன் கண் முன்னே புதுப்பெண் பரிதாபமாக இறந்தார்.
கோவில் திருவிழாவுக்கு...
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள பருவதனஅள்ளி பகுதியை சேர்ந்தவர் சம்பத் (வயது 24). இவர் ஓசூரில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சினேகா (21) என்பவருக்கும் கடந்த 6 மாதத்துக்கு முன்பு திருமணம் நடந்தது. 
இந்த நிலையில் நேற்று கணவன்-மனைவி 2 பேரும் கிருஷ்ணகிரி மாவட்டம் அகரம் பகுதியில் நடந்த கோவில் திருவிழாவிற்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றனர். காரிமங்கலம் அகரம் பைபாஸ் ரோட்டில் சாலையை கடக்க முயன்றபோது தர்மபுரியில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி வந்த டேங்கர் லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியது. 
புதுப்பெண் சாவு
இந்த விபத்தில் கணவன்-மனைவி 2 பேரும் கீழே விழுந்தனர். இதில் புதுப்பெண் சினேகா லாரி சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே கணவர் கண் முன்னே பரிதாபமாக இறந்தார். சம்பத் படுகாயம் அடைந்தார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் காரிமங்கலம் போலீசார் விரைந்து சென்று சம்பத்தை மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 
பின்னர் சினேகாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து காரணமாக கிருஷ்ணகிரி-தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கட்ராமன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Tags :
Next Story