நர்சை தாக்கிய கணவர் கைது


நர்சை தாக்கிய கணவர் கைது
x
தினத்தந்தி 1 April 2022 11:51 PM IST (Updated: 1 April 2022 11:51 PM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரத்தில் நர்சை தாக்கிய கணவர் கைது செய்யப்பட்டார்.

ராமநாதபுரம், 

ராமநாதபுரத்தை அடுத்துள்ள திருஉத்தரகோசமங்கை அருகே உள்ள மல்லல் மேலசீத்தை கிராமத்தை சேர்ந்தவர் மங்களேஸ்வரன் (வயது45). இவரது மனைவி போதும்பொண்ணு (34). தனியார் ஆஸ்பத்திரியில் செவிலியராக பணியாற்றி வருகிறார். மங்களேஸ்வரன் அடிக்கடி மதுகுடித்துவிட்டு வந்து மனைவியை அடித்து வந்தாராம். இதுதொடர்பாக போதும்பொண்ணு அளித்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் சமரசம் பேசி மங்களேஸ்வரனை எச்சரித்து அனுப்பி வைத்துள்ளனர். 
 இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த மங்களேஸ்வரன் மனைவியை கழுத்தை நெரித்து கீழே தள்ளி கழுத்தில் மிதித்துள்ளார். இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில் திருஉத்தரகோசமங்கை போலீசார் வழக்குபதிவு செய்து மங்களேஸ்வரனை கைது செய்தனர்.


Next Story