விபத்தில் எலக்ட்ரீசியன் பலி


விபத்தில் எலக்ட்ரீசியன் பலி
x
தினத்தந்தி 2 April 2022 12:33 AM IST (Updated: 2 April 2022 12:33 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகர் அருகே விபத்தில் எலக்ட்ரீசியன் பலியானார்.

விருதுநகர்,
விருதுநகர் பாண்டியன் நகர் தங்கமணி காலனியை சேர்ந்தவர் சுமித்ரா (வயது38). சவுதி அரேபியாவில் நர்சாக பணியாற்றி வந்த இவர் கடந்த வாரம் குடும்பத்தை கவனிப்பதற்காக ஊர் திரும்பினார். இவரது கணவர் முத்து கிருஷ்ணன் (42),  எலக்ட்ரீசியன்.  இந்நிலையில் விருதுநகர் அருப்புக்கோட்டை ரோட்டில் இருசக்கர வாகனத்தில் சென்ற அவர் அங்குள்ள செக் போஸ்ட் கம்பத்தில் மோதியதில் படுகாயமடைந்து சிகிச்சைக்காக விருதுநகர் அரசுஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் போது பரிதாபமாக இறந்தார். இதுபற்றி சுமித்ரா கொடுத்த புகாரின்பேரில் இந்நகர் கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். 


Related Tags :
Next Story