உணவு பொருட்களின் விலை உயரும் அபாயம்
வர்த்தக கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு எதிரொலியாக உணவு பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஏழை, நடுத்தர வர்க்கத்தினர் செய்வதறியாமல் தவித்து வருகிறார்கள்
திருச்சி, ஏப்.2-
வர்த்தக கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு எதிரொலியாக உணவு பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஏழை, நடுத்தர வர்க்கத்தினர் செய்வதறியாமல் தவித்து வருகிறார்கள்.
வர்த்தக கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு
இந்தியாவில் கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வருகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வை காரணம் காட்டி தொடர்ந்து விலை ஏற்றத்தால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகிறார்கள். இதனை தொடர்ந்து வீட்டு உபயோகத்துக்கான கியாஸ் சிலிண்டர் விலை ரூ.50 உயர்த்தப்பட்டது. இந்த விலை உயர்வால் இல்லத்தரசிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். தற்போது வர்த்தக கியாஸ் சிலிண்டர்களின் விலையும் ரூ.268.50 வரை உயர்ந்துள்ளது. இதனால் உணவு பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக மக்கள் தவித்து வந்தனர். ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கடைகள் மூடப்பட்டதாலும் பலர் தொழில் வாய்ப்புகளை இழந்து நஷ்டத்தை சந்தித்தனர். கொரோனாவுக்கு பிறகு அத்தியாவசிய பொருட்களின் விலை தாறுமாறாக உயர தொடங்கியது. தற்போது வர்த்தக கியாஸ் விலையும் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளதால் உணவு பொருட்களின் விலை உயருமோ? என ஏழை, நடுத்தர வர்த்தகத்தினர் தவித்து வருகிறார்கள்.
கூட்டத்தில் ஆலோசனை
இது குறித்து திருச்சி டீ, காபி வர்த்தக நலச்சங்க அமைப்பாளர் ராவுத்தர்ஷா கூறும்போது, கொரோனா பரவலுக்கு பிறகு வர்த்தக நிறுவனங்களில் 40 சதவீதம் வியாபாரம் குறைந்துவிட்டது. ஊரடங்கு காரணமாக கடைகள் மூடப்பட்டதால் சரக்குகள் தேக்கம் அடைந்து கெட்டுபோய்விட்டன. தற்போது கொரோனா முடிவுற்ற பிறகு, இப்போது தான் படிப்படியாக பழைய நிலைக்கு திரும்பி வருகிறோம். அதற்குள் வர்த்தககியாஸ் விலை உயர்வு மேலும் சிரமத்தை அதிகரித்துள்ளது. டீ, விலை சமீபத்தில் தான் ரூ.12 ஆக உயர்த்தப்பட்டது. தற்போது ஒரேடியாக விலை உயர்வு செய்ய முடியாது. ஆகவே மத்திய-மாநில அரசுகள் கியாஸ் விலை உயர்வை வாபஸ் பெற வேண்டும். இது தொடர்பாக நாளை (ஞாயிற்றுக்கிழமை) சங்க ஆலோசனை கூட்டத்தில் முடிவெடுத்து தீர்மானம் நிறைவேற்றுவோம் என்றார்.

Related Tags :
Next Story