8-ம் வகுப்பு மாணவியை கர்ப்பிணியாக்கிய 9-ம் வகுப்பு மாணவர்


8-ம் வகுப்பு மாணவியை கர்ப்பிணியாக்கிய 9-ம் வகுப்பு மாணவர்
x
தினத்தந்தி 2 April 2022 12:51 AM IST (Updated: 2 April 2022 12:51 AM IST)
t-max-icont-min-icon

சிவகங்கை மாவட்டத்தில் 8-ம் வகுப்பு மாணவியை கர்ப்பிணியாக்கிய 9-ம் வகுப்பு மாணவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

சிவகங்கை,

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கும் 13 வயது மாணவிக்கு அதே பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் 14 வயது மாணவர் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதில் அந்த மாணவி 8 மாத கர்ப்பம் அடைந்தார். இது குறித்து அறிந்த மாணவியின் தாயார் சிவகங்கையில் உள்ள அனைத்து மகளிர் ேபாலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதுதொடர்பாக இன்ஸ்பெக்டர் முத்துமீனாட்சி  9-ம் வகுப்பு மாணவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Next Story