திண்டிவனத்திற்கு வருகை தரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு
சிப்காட் அடிக்கல் நாட்டு விழா நடக்கிறது. இதற்காக வருகை தரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும்.அமைச்சர் செஞ்சி மஸ்தான் தகவல் தெரிவித்துள்ளார்.
திண்டிவனம்,
விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திண்டிவனத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு முன்னாள் எம்.எல்.ஏ. மாசிலாமணி தலைமை தாங்கினார். விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளரும், சிறுபான்மை நலத்துறை அமைச்சருமான செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு பேசுகையில், திண்டிவனத்தில் வருகிற 5-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) சிப்காட் அடிக்கல் நாட்டு விழா நடக்கிறது. இதற்காக வருகை தரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும் என்றார்.
கூட்டத்தில் திண்டிவனம் நகர மன்ற தலைவர் நிர்மலா ரவிச்சந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சீதாபதி சொக்கலிங்கம், சேதுநாதன், செந்தமிழ்ச்செல்வன், மாநில மருத்துவர் அணி துணை செயலாளர் டாக்டர் சேகர், மாநில பொதுக்குழு உறுப்பினர் ரமணன், திண்டிவனம் நகர செயலாளர் கபிலன், மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் வக்கீல் ஆதித்தன், வக்கீல் பாபு, தீர்மானக்குழு உறுப்பினர் சிவா, ஒலக்கூர் ஒன்றியக்குழு தலைவர் சொக்கலிங்கம், ஒன்றிய செயலாளர்கள் மணிமாறன், பழனி, ராஜாராம், மாவட்ட பொருளாளர் ரவி, இலக்கிய அணி சின்னசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story