சிவகாசியில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.108.50-க்கு விற்பனை


சிவகாசியில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.108.50-க்கு விற்பனை
x
தினத்தந்தி 2 April 2022 1:21 AM IST (Updated: 2 April 2022 1:21 AM IST)
t-max-icont-min-icon

சிவகாசியில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.108.50-க்கு விற்பனை ஆனது. இதனால் வியாபாரிகள், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

சிவகாசி, 
சிவகாசியில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.108.50-க்கு விற்பனை ஆனது. இதனால் வியாபாரிகள், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். 
விலை உயர்வு 
இந்தியாவில் பெட்ரோல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. இந்த நிலையில் சிவகாசியில் கடந்த மாதம் 23-ந்தேதி 1 லிட்டர் பெட்ரோல் ரூ.103.91-க்கு விற்பனையானது. 
அதை தொடர்ந்து 27-ந்தேதி 105.88-க்கு விற்பனையானது. மார்ச் 30-ந்தேதி 107.67-க்கு விற்பனையாது. 31-ந் தேதி 108.43-க்கு விற்பனையானது. கடந்த 9 நாட்களில் சிவ காசியில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.4.50 விலை உயர்ந்துள்ளது. மார்ச் 1-ந் தேதி 1 லிட்டர் பெட்ரோல் ரூ.102.34-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் நேற்று 108.43-க்கு விற்பனை செய்யப்பட்டது.
பொதுமக்கள் அதிர்ச்சி 
 கடந்த ஒரு மாதத்தில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.6 விலை உயர்ந்துள்ளது. சராசரியாக ஒரு நபர் தினமும் 1 லிட்டர் பெட்ரோல் பயன்படுத்தும் நிலையில் இனி வரும் காலங்களில் மாத செலவில் ரூ.180 கூடுதல் செலவு ஆக வாய்ப்பு உள்ளது. இந்த விலையேற்றம் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
இதுகுறித்து காய்கறி வியாபாரி மாணிக்கம் கூறியதாவது, நான் மோட்டார் சைக்களில் காய்கறி விற்பனை செய்து வருகிறேன். தினமும் 3 லிட்டர் பெட்ரோல் செலவு செய்கிறேன். தற்போது தினமும் ரூ.20 கூடுதலாக செலவு ஆகிறது. காய்கறி விலை ஏற்றத்தால் மக்கள் வழக்கத்தை விட எடை குறைவாக காய்கறிகளை வாங்குகிறார்கள். இதனால் காய்கறி முழுமையாக விற்பனை செய்ய முடியாமல் நஷ்டம் ஏற்படுகிறது. எந்த விலை ஏறினாலும் பெரும் பாதிப்பு ஏற்படுவது இல்லை. ஆனால் பெட் ரோல்-டீசல் விலை உயர்ந்தால் மட்டும் அனைத்து விலைகளும் கடுமையாக உயருகிறது. 
தள்ளுவண்டி 
எனவே இனி வரும் காலங் களில் காய்கறிகளை மோட்டார் சைக்களில் கொண்டு வந்து விற்பனை செய்யாமல் தள்ளு வண்டியில் கொண்டு வந்து விற் பனை செய்தால் தினமும் ரூ.300 செலவு குறையும். 
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story